வீகன் பர்ஃபி (பால் பொருட்கள் தவிர்ப்பவர்களுக்கு)
தேவையான பொருட்கள்:
பாதாம் பொடி - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
கேரட் துருவல் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 1/2 - 2 கிண்ணம்
தண்ணீர் - 3/4 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, கம்பிப் பாகு காய்ச்சவும். பிறகு, நைஸாகத் துருவிய கேரட்டையும், தேங்காய்த் துருவலையும் அதில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறவும். ஈரப்பசை போனபின், வாசனைப் பொடிகளைச் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சப்பாத்தி மாவுபோலத் திரண்டு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஒரு சுழற்று சுழற்றி நான்ஸ்டிக் அலுமினியம் ஃபாயில் அல்லது கண்ணாடித் தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பவும். இதைத் துண்டுகளாகச் செய்யவும். ருசியான பர்ஃபி தயார்.

வசுமதி கிருஷ்ணசுவாமி

© TamilOnline.com