தமிழ் நாடு அறக்கட்டளையின் (Tamil Nadu Foundation) 45வது மாநாடு 2019 மே 25-26 தேதிகளில் அட்லாண்டாவில் நடைபெற உள்ளது. 1974 முதல் கல்வி, பெண் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் தளங்களில் இயங்கிவரும் அறக்கட்டளையின் இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோள் 'மண்வாசனை'. இந்தக் கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 2 நாட்களுக்கு ஒரு திருவிழாபோல நடைபெற உள்ளது. மண்வாசனை தமிழ் நாட்டின் 33 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மேற்சொன்ன நோக்கங்களுடன் தீவிரமாக இயங்கி வரும் இந்தப் பணி தடையின்றித் தொடர ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 லட்ச ரூபாய்க்கு ஆதாரநிதி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் வட்டியினால் இந்தப் பணிகள் நடத்தப்படும்.
'கடையெழு வள்ளல்கள்' நாட்டிய நாடகம்: மதுரை முரளிதரனின் இந்த நாட்டிய நாடகம் ஒரு பிராட்வே நிகழ்ச்சிக்குச் சிறிதும் குறைந்ததல்ல. LED ஒளிக்காட்சியுடன், தமிழ் வள்ளல்கள் எழுவரின் கதையை 120 நாட்டியக் கலைஞர்கள் மேடையில் உயிர்ப்பித்து நம்மைப் பரவசமடையச் செய்வார்கள்.
இன்னிசை மழை: விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் வெற்றியாளர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் மண்வாசனை கமழும் மக்களிசைப் பாடல் நிகழ்ச்சி.
பட்டிமன்றம்: மண் வாசனையின் சிறப்பம்சமாகத் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், உள்ளூர் மற்றும் வெளியூர்ப் பேச்சாளர்கள் பங்கேற்றுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள்.
தமிழிசை: சிக்கில் குருச்சரண் அவர்களின் ரம்மியமான குரலில் அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் தமிழிசைப் பாடல்கள் கேட்கலாம்.
பறையாட்டத்துடன் தொடங்கி நம் கலைகள் அரங்கேறப் போகும் இந்த அருமையான 2 நாள் திருவிழாக் கொண்டாடட்டத்தில் பங்கேற்று மகிழ்வதோடு, தான் பிறந்த மண்ணுக்கு, தன்னை வளர்த்த பள்ளிக்கு, தன் பங்கைச் செய்து ஆத்மதிருப்தி அடைய வாருங்கள்.
மேலும் தகவலுக்கு: convention.tnfusa.org தொலைபேசி: 781-486-3872 (781-4TNF-USA) மின்னஞ்சல்: president@tnfusa.org
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |