கன்னித் தீவு


வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் கன்னித் தீவு. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் இது. இசை: ஆரோல் கரோலி. இயக்கம்: சுந்தர் பாலு. இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு, "கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர். மேலும் படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு தீவில் படம் பிடித்துள்ளோம். வடசென்னையில் ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் போராட்டத்தில் குதித்து, வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்தப் பிரச்சினை என்ன, நால்வரும் எப்படிப் போராடுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை" என்கிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com