தேவையான பொருட்கள்
குளிர்ந்த பால் - 2 கிண்ணம் கெட்டியான பட்டுப் போன்ற டோ·பூ (firm and silken) துண்டங்கள் - 1 கிண்ணம் ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி, ப்ளூபெரி (தனியாகவோ கலந்தோ) - 2 கிண்ணம் ஏதாவதொரு பழ எஸன்ஸ் அல்லது வனிலா எஸன்ஸ் - 3/4 தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை
மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் மேல் கூறிய எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பின்னர் கண்ணடி டம்ளர்களில் விட்டுக் குடிக்கவும்.
பின்குறிப்பு
உறைநிலைப்படுத்திய (Frozen) பெரி பழங்களையும் உபயோகிக்கலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |