காப்பான்


சூர்யா நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் படம் காப்பான். சாயிஷா சைகல் நாயகியாக நடிக்கிறார். உடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி, சமுத்திரகனி, பிரேம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தை எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கே.வி. ஆனந்த் இயக்குகிறார். படத்தில் புலனாய்வுத்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்து. தமிழ்ப்புத்தாண்டுக்கு இப்படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com