அஜீத் நடிக்கும் புதிய படம்


விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அஜீத் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் கதாநாயகி வித்யா பாலன். உடன் ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். வினோத் குமார் இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com