தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கிண்ணம் புழுங்கல் அரிசி - 1 கிண்ணம் வெள்ளை/கருப்பு உளுந்து - 3/4 கிண்ணம் வெந்தயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: கொள்ளையும் அரிசியையும் சேர்த்து 5, 6 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். ஊறவைத்த உளுந்தையும் வெந்தயத்தையும் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு கொள்ளையும் அரிசியையும் அரைத்து, உப்புச் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஊற்றி, ஆவியில் வேகவிடவும். புதினா சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மரகதம் அம்மா, அட்லாண்டா, ஜார்ஜியா |