ஆரஞ்சு ஜிஞ்ஜர் ஏல் (Ginger Ale) ஜூஸ்
தேவையான பொருட்கள்

ஆரஞ்சுச் சாறு (தயார் நிலையில் உள்ளது) - 2 கிண்ணம்
ஜிஞ்ஜர் ஏல் (Ginger Ale - குளிரவைத்தது) - 2 கிண்ணம்
எலுமிச்சம் பழச் சாறு (புதிது) - 1 மேசைக்கரண்டி
வில்லையாகச் சீவிய ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழம் - சில

செய்முறை

மேலே கூறிய எல்லாப் பொருட்களையும் ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து பருகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்னர் தேவைக்கேற்ப எடுத்து அருந்தவும்.

பின்குறிப்பு

இது போல் அன்னாசிச் சாறு, கிரான்பெரி சாறு (cranberry) வைத்தும் செய்யலாம்.

ஜிஞ்ஜர் ஏல் (Ginger Ale) அமெரிக்கன் அங்காடிகளில் கிடைக்கும்

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com