சிமி வேலி தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா
ஜனவரி 13, 2019 அன்று கலிஃபோர்னியாவின் சிமி வேலி தமிழ்ப்பள்ளி பொங்கல் விழாப் போட்டிகளை நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் யோகா கந்தசாமி வரவேற்றுப் பேசினார். அரங்கிலேயே பொங்கல் சமைக்க, "பொங்கலோ பொங்கல்" என்ற பேரொலி எழுந்தது.

அடிப்படை வகுப்புமுதல் 2ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் மழலைப் பாட்டு, ஆத்திசூடி, பாரதி பாடல், பாரதிதாசன் பாடல், தமிழ்நாடு போன்ற பல்வேறு பிரிவுகளில் அழகுத் தமிழில் பேசினார்கள். 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கான தமிழ்த்தேனீ விளையாட்டுப் போட்டி மாணவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நடத்தப்பட்டது. 6ம் வகுப்பிற்கு வார்த்தை விளையாட்டுப் போட்டி நடந்தது.

பள்ளியின் 100 மாணவர்களும் போட்டிகளில் பங்கேற்றனர். நாட்டுப் பண்ணுடன் பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.

வித்யாலக்ஷ்மி,
சிமி வேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com