லெமனேட் (Lemonade)
தேவையான பொருட்கள்

எலுமிச்சம் பழச்சாறு (புதிது) - 1 1/2 கிண்ணம்
சர்க்கரை - தேவைக்கேற்ப
மஞ்சள் நிற உணவுப் பவுடர் (வேண்டுமானால்) - 1/2 சிட்டிகை
வில்லையாகச் சீவிய எலுமிச்சம்பழத் துண்டுகள் - சில
சமையல் சோடா - சிறிதளவு

செய்முறை

சர்க்கரையை மிக்ஸியில் நன்கு பொடி செய்துகொள்ளவும். அதை ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு இரண்டு கிண்ணம் குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் நிற உணவுப் பவுடர் சேர்த்து நன்றாகக் கரைத்து உபயோகிக்கும் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

அருந்தும் போது தேவையான அளவு பனிக் கட்டிகளுடன் சமையல் சோடா சேர்த்துக் கலக்கி, உயரமான கண்ணாடி டம்ளர்களில் விட்டு, விளிம்புகளில் மெல்லிய எலுமிச்சம் பழ வில்லையை அழகூட்ட வைத்து அருந்தவும்.

சமையல் சோடா சேர்த்தவுடன் சற்று பொங்கி நுரைக்கும்.

பின்குறிப்பு

இத்துடன் சிறிது இஞ்சிச் சாறு சேர்த்து அருந்தினால் இந்த லெமனேட் தனி ருசியுடன் இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com