விரிகுடா குறள்கூடம் இவ்வாண்டுக்கான திருக்குறள் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில், ஒரு குறளை அதன் பொருளோடு கூறினால் ஒரு டாலர் பரிசு வெல்லலாம். குழந்தைகள் திருக்குறளுக்கான பொருளைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கூறலாம்.
2014ம் ஆண்டு தொடங்கி, ஐந்து வருடங்களாக நடத்தப்பட்டு வரும் திருக்குறள் போட்டி 2019ல் ஆறாவது வருடமாக 90க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடனும், புரவலர்கள் பலரின் பொருளுதவியுடனும் நடக்க இருக்கின்றது.
சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் போட்டி வாய்ப்பு உள்ளது.
போட்டியாளர் பிரிவுகள்: 5 வயதுக்குக் கீழ் 6 முதல் 9 வயதுவரை 10 முதல் 13 வயதுவரை 14 முதல் 15 வயதுவரை 16 முதல் 18 வயதுவரை பெரியவர்கள்
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பதிவுசெய்ய: www.bayareakuralkoodam.org பதிவு செய்யத் தொடக்கம்: 2018 டிசம்பர் 17 பதிவு செய்யக் கடைசிநாள்: 2019 மார்ச் 3 போட்டி நடைபெறும் நாள்: 2019 மார்ச் 16, சனிக்கிழமை
போட்டி நடைபெறும் இடங்கள்: ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி, ஃப்ரீமான்ட் க்வெஸ்ட்டா தொடக்கப்பள்ளி, மெளன்டன் ஹவுஸ் போட்டி நேரம்: காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை
திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா: நாள்: 2019 மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை இடம்: டப்ளின் உயர்நிலைப்பள்ளி, டப்ளின், கலிஃபோர்னியா நேரம்: மாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை
திருக்குறள் சித்திரப் போட்டி உங்கள் குழந்தைகள் சித்திரம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்கள் திருக்குறள் சார்ந்த சித்திரம் வரைந்து, ஃபிப்ரவரி மாத இறுதிக்குள் பதிவேற்றலாம். அதற்கான இணைய முகவரி: www.bayareakuralkoodam.org
ஓவியங்கள் சான்றிதழ் பெறுவதோடு, விழா மலரிலும் இடம்பெறும். போட்டியில் வெல்லும் சித்திரம் விழா மலரின் அட்டையை அலங்கரிக்கும். உலகப் பொதுமறையாம் திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல நாமும் பங்களிப்போம்.
திருமுடி துளசிராம், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |