தமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை
மார்ச் 30, 2019 சனிக்கிழமை அன்று தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைப்பதற்கு நிதி திரட்டும் நோக்கில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் டாக்டர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் லட்சுமண் சுருதி குழுவினருடன் வழங்கும் மெல்லிசைக் கச்சேரியை ஏற்பாடு செய்துள்ளது. சான் ஹோசே நகரத்தின் சிட்டி நேஷனல் சிவிக் அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

அனுமதிச் சீட்டு $39, $49, $69, $89, $109, $125, $250, $500 என்ற விலைகளில் கிடைக்கும்.

இவற்றை வாங்க:
இணையத்தில்: http://sulekha.com/batm
அண்ணாமலை - 614-805-0931
மீனா - 925-366-0775

மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் அனுப்புக: spblive@sfbatm.org

ராஜா அழகர்சாமி,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com