அஹோரன்
வேற்றுக்கிரகவாசிகள், விண்வெளி அதிசயங்கள், அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றை வைத்து உருவாகிவரும் படம் அஹோரன். புதுமுகங்கள் கங்காதரன், கே. கணேசன், நந்தினி, அக்‌ஷயா, அஜய், ஸ்டாலின், சினேகராஜன் இதில் அறிமுகமாகின்றனர். பாடல்களைப் பிறைசூடன், சொற்கோ, பாலகிருஷ்ணன் எழுத, இசையமைக்கிறார் ஜோசப். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்து இயக்குகிறார் ஜி. லோகேஸ்வரன். "விண்வெளி அதிசயங்களையும், வேற்றுக்கிரகவாசிகளால் பூமியில் ஏற்படும் மாற்றங்களையும் வைத்து இந்தப் படம் உருவாகிறது. அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில், மெய்சிலிர்க்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் ஏராளம். மொத்தத்தில் புதிய அனுபவமாக இருக்கும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com