தக்காளிச் சாறு
தேவையான பொருட்கள்

தக்காளிப் பழத் துண்டங்கள் - 2 கிண்ணம்
சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

தக்காளிப் பழத் துண்டங்களைச் சர்க்கரை யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக மசியும் வரை அரைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டவும். வடிகட்டியில் உள்ள தக்காளிக் கலவையில் 2 கிண்ணம் குளிர்ந்த தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டுத் தக்காளி கலவையைக் கையால் அல்லது ஒரு மரக்கரண்டியால் நன்றாகக் கசக்கி முடிந்த வரை எல்லாத் தக்காளிச் சாறையும் இறக்கவும்.

தக்காளித் தோல், விதைகள் உள்ள சக்கையை கொட்டி விடவும். வடிகட்டி வந்த சாறை மறுபடி மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மிக்ஸியை 30 வினாடிகள் ஓட்டவும்.

இந்தச் சாறை உபயோகிக்கும் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம். ஆனால் பருகுமுன்பு அடி மேலாக கலக்கியோ அல்லது மிக்ஸியில் 10 வினாடிகள் ஓட்டிப் பிறகு கண்ணடி டம்ளர்களில் விட்டு அருந்தவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com