ஒத்தைக்கு ஒத்த


அதர்வா நாயகனாக நடிக்கும் படம் இது. ஸ்ரீதிவ்யா கதாநாயகி. வித்யா பிரதீப் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். நரேன், தியாகராஜன் இருவரும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர், "கல்லூரி மாணவர் பாத்திரத்திற்காகத் தன் உடலமைப்பைக் கனகச்சிதமாக மாற்றி இருக்கிறார் அதர்வா. தற்போதைய காலத்திற்கும், இனி வரும் காலத்திற்கும் ஏற்றதாக 'ஒத்தைக்கு ஒத்த' இருக்கும். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்" என்கிறார். கல்லூரி மாணவர்களின் காதல், மோதல் ஆகியவற்றை மையமாக கொண்ட படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com