தேவையான பொருட்கள்
குளிர்ந்த பால் - 3 கிண்ணம் பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - 1 மேசைக்கரண்டி பிஸ்தா பருப்பு (Pistachios) - 1 மேசைக்கரண்டி வால்நட் பருப்பு - 1 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 8 காய்ந்த திராட்சை - 20 காய்ந்த செரி பழத் துண்டங்கள் - 1 மேசைக்கரண்டி பேரீச்சம் பழத் துண்டங்கள் - 1/4 கிண்ணம் சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கேற்ப
செய்முறை
பழத் துண்டங்களைச் சிறிது சூடான தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைக்கவும். பருப்புகளைத் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். இதனுடன் ஊறிய பழத் துண்டங்களைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முடிந்த வரை மையாக அரைத்துக் கொள்ளவும். (வேண்டுமானால் இதை வடிகட்டலாம்).
மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் இந்தக் கலவையுடன் தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன், குளிர்ந்த பால் விட்டு ஒரு நிமிடம் மிக்ஸியை ஓட்டவும். கெட்டியாக இருந்தால் சில பனி கட்டிகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
பின் குறிப்பு
தேவையானால் சிறிது ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, லவங்கப் பட்டைப் பொடி சேர்த்துப் பருக வட இந்தியாவில் பிரபலமான தண்டை (Thandai) போல இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |