குளிர்ந்த கா·பி
தேவையான பொருட்கள்

குளிர்ந்த பால் - 2 கிண்ணம்
பாதி பால் பாதி பாலேடு
(half and half) - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கேற்ப
தீடீர் கா·பி பொடி - 2 தேக்கரண்டி
சூடான தண்ணீர் - 1/4 கிண்ணம்

செய்முறை

சூடான தண்ணீரில் தீடீர் கா·பிப் பொடியைச் சர்க்கரையுடன் நன்றாகக் கரைத்து ஆற வைக்கவும்.

இந்தக் கலவையைக் குளிர்ந்த பாலுடன் மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் (Jar) ஊற்றி 30 வினாடிகள் மிக்ஸியை ஓட்டவும்.

பின்னர் பாதி பால் பாதி பாலேடு மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து நுரைத்து வரும்வரை மிக்ஸியை ஓட்டவும். இப்போது குளிர் கா·பி தயார்.

பின்குறிப்பு

பாதி பால் பாதி பாலேடு (half and half) சேர்க்காமலும் செய்யலாம்.

க·பீன் நீக்கப்பட்ட தீடீர் கா·பி பொடி (decaffinated instant coffee powder) உபயோகித்தும் செய்யலாம். இதே போல் தீடீர் டீத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

மிக்ஸிக்கு பதில் hand shaker-ல் விட்டு நன்கு கையால் குலுக்கியும் இதைச் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com