தமிழ் நாடு அறக்கட்டளை கிளீவ்லாந்து: கஜா புயல் நிவாரண நிதி
டிசம்பர் 16, 2018 ஞாயிறன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளீவ்லாந்து, ஒஹையோ கிளை, கஜா புயல் நிவாரணநிதி திரட்ட 'கரியோக்கி இரவு' நிகழ்வை பர்மா சிட்டி ஹாலில் நடத்தியது. ஏறக்குறைய எழுபது நல்லுள்ளங்கள் பங்கேற்று நிதி வழங்கினர். மழையின் காரணமாக நிகழ்விற்கு வர இயலாத சிலர் ஆன்லைனில் பொருளுதவி செய்தனர். நிகழ்ச்சியில் பத்துப் பாடகர்கள் பாடி வந்திருந்தோரை மகிழ்வித்தனர். இது

கிளீவ்லாந்து கிளையின் முதல் நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நோக்கம் மற்றும் தமிழகச் செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது. இதில் திரட்டப்பட்ட 2500 டாலர் தொகை, கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படும்.

சந்திரசேகரா காயாம்பூ,
கிளீவ்லாந்து

© TamilOnline.com