புதிய மெல்லிசைக் குழு
பாரதியார் விழாவில் மெல்லிசைக் குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. ஆர்வலர்கள் பலரும் இக்குழுவில் இடம்பெறப் பெயர்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர். தேர்வு செய்யப்படும் கலைஞர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு விரிகுடாப் பகுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். பிரபல திரையிசைக் கலைஞர்களிடம் பணியாற்றியவரும், 20 வருடம் வாய்ப்பாட்டு மற்றும் பல இசைக்கருவிகள் கற்றவரும், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிஷ்யருமான திரு. பிரதீப் சுவாமிநாதன் இக்குழுவை முன்னெடுத்துச் செல்வார்.

ராம்குமார்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com