பாரதி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிகள்: பாரதியார் விழா
டிசம்பர் 16, 2018 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் மில்பிடாஸ் சாய் கோயில் அரங்கில் பாரதியார் பிறந்த தினத்தைக் கொண்டாடியது. இவ்விழாவில் சிறுவர் சிறுமிகளுக்குப் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்குப் பரிசுக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. குழந்தைகள் பாடிய பாரதியார் பாடல்களும், நடனங்களும் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கின. அத்துடன் மெல்லிசை மற்றும் பாரதியார் குறித்த கலந்துரையாடலும் இடம்பெற்றன.



© TamilOnline.com