ஒஹையோ: கஜா புயல் நிவாரண நிதி
டிசம்பர் 16, 2018 ஞாயிறன்று, கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளை (TNF - Central Ohio Chapter) இணைந்து, கஜா புயல் நிவாரண நிதி திரட்ட 'மொய் விருந்து' நிகழ்வை கேக் வாக் உணவகத்தின் டப்ளின் கிளையில் நடத்தினர். குளிரைப் பொருட்டாகக் கருதாமல், ஏறக்குறைய இருநூற்றைம்பது அன்பர்கள் பங்கேற்று நிதி வழங்கியது நெஞ்சை நெகிழ்த்தியது. இந்த முயற்சியின் மூலம் கிட்டத்தட்ட 9,000 டாலர் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகக் குடும்பங்களின் மறுவாழ்விற்குப் பயன்படுத்தப்படும்.

சிவா ராஜு,
கொலம்பஸ் தமிழ்ச்சங்கம்

© TamilOnline.com