இளம்நடிகர் கவின் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகி. இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தரண் இசையமைக்க, சிவா அரவிந்த் இயக்குகிறார். இவர், இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்படம் பற்றி இவர், "இது நண்பர்களின் உண்மைக் கதை. உண்மையான நட்புபற்றிச் சொல்லும் ஜாலியான படம். வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். இதில் ஓர் இளைஞன் காதல் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள். பின்னர் அந்தக் காதல்ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதைக் கலகலப்பாகச் சொல்லி இருக்கிறோம்" என்கிறார்.
அரவிந்த் |