புளூவேல்


விளையாட்டாக அறிமுகமாகி உலகெங்கிலும் பலரது உயிரிழப்புக்குக் காரணமானது புளூவேல் ஆட்டம். அந்த விளையாட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம்தான் புளூவேல். பிர்லாபோஸ்-திவ்யா பெற்றோர் வேடத்தில் நடிக்க, விளையாட்டுச் சிறுவன் பாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணா. பி.சி. ஷிவன் இசையமைக்கிறார். டி. ரங்கநாதன் இயக்குகிறார். பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com