திருமணம் சில திருத்தங்களுடன்


கதையசம்சமுள்ள நல்ல படங்களை மட்டுமே இயக்கித் தருகிறவர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் போன்ற நல்ல படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கும் படம் 'திருமணம் சில திருத்தங்களுடன்'. நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகமாகிறார். உடன் சுகன்யா, எம்.எஸ். பாஸ்கர், பாலசரவணன், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சித்தார்த் விபின். படத்தில் சேரனும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்கிறார் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com