கொம்புவச்ச சிங்கம்டா


சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் இது. பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன். திரைக்கதை, வசனமும் இவரே. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். உடன் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், தீபா ராமனுஜம், படத் தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இசை: திபு நைனன் தாமஸ்.

அரவிந்த்

© TamilOnline.com