ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடனும் விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான 'தைப்பூசப் பாதயாத்திரை'யை அன்பர்கள் எதிர்பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வழக்கம்போல் சான் ரமோன் மத்தியப் பூங்காவில் (Central Park) ஜனவரி 19ம் நாள் காலை 7:45 மணியளவில் துவங்கி, கான்கார்ட் சிவ முருகன் கோவிலில் இந்தப் பாதயாத்திரை நிறைவுபெறும். இது வெற்றிகரமான ஒன்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. பாதையிலோ, மற்ற ஏற்பாடுகளிலோ எந்த மாற்றமும் இல்லை.
அனைவரும் பாதயாத்திரையில் கலந்துகொண்டு, கான்கார்ட் முருகனின் ஆசிகளைப் பெற்று, சிறப்போடு வாழப் பாதயாத்திரை விழாக் குழுவினர் அன்போடு அழைக்கிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு pathayathirai.org
கணேஷ் பாபு, சான் ரமோன், கலிஃபோர்னியா |