தேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் - 4 கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி அரிசி - 2 தேக்கரண்டி மக்காச்சோள மாவு - 1 தேக்கரண்டி வெங்காயம் (நறுக்கியது - 1 கிண்ணம் இஞ்சி - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 மிளகாய்வற்றல் - 4 கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
கடலைப் பருப்பை ஊறவைத்துச் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். அரிசியை ஊறவைத்து அத்துடன் போட்டு அரைத்து, பிரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், மிளகாய், இஞ்சி, உப்பு, மக்காச்சோள மாவு சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாகக் கலக்கவும். எண்ணெய் காயவிட்டு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி, நியூ ஜெர்சி |