BATM: தீபாவளி விழா 2018
அக்டோபர் 28, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் தீபாவளி விருந்து நெவார்க் பகுதியிலுள்ள ஒயாஸிஸ் அரங்கில் நடத்தப்பட்டது. அறுசுவை விருந்து மற்றும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் குதூகலமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர்.

பல்வேறு நடனக் குழுவினர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. இசைக்குழுவை சேர்ந்தவர்கள் பாடிய பாடல்கள், ரம்மியமான மாலைப் பொழுதை மேலும் இனிமையாக்கும் விதமாக அமைந்தது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாகப் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பல்வேறு சிறந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதற்காக மன்ற நிர்வாகிகள் திரு தயானந்தன் வெங்கடாச்சலம், திரு ரமேஷ் சத்யமூர்த்தி, திரு ரமேஷ் குப்புசாமி, திரு சங்கர் நடராஜன், திரு கார்த்திக் பெருமாள், திரு குணா பதக்கம் ஆகியோருக்கு உறுப்பினர்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக, பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த DJ இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் அனைவரும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ரமேஷ் குப்புசாமி,
நெவார்க், கலிஃபோர்னியா

© TamilOnline.com