ராஜாவுக்கு ராஜா


தைரியமே இல்லாத கதாநாயகன் சந்தர்ப்ப வசத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். ஒரு கட்டத்தில் ஒரு பெரிய பெண் ரவுடியிடம் மாட்டிக் கொள்கிறார். அவளிடமிருந்து நாயகன் எப்படித் தப்பிக்கிறார், அவளை எப்படிக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பதைச் சொல்கிறது ராஜாவுக்கு ராஜா. வி.ஆர். விநாயக் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக தியா, வைஷ்ணவி நடிக்கின்றனர். உடன் 'மகாநதி' சங்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'அங்காடி தெரு' படத்தில் நடித்த சிந்து இப்படத்தில் பெண் ரவுடி ஆக நடிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஏ. வசந்த்குமார். இசை: ஜெயக்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com