கென்னடி கிளப்


சுசீந்திரன் இயக்கும் புதிய படம் இது. நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா தோன்றுகிறார். உடன் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வருகிறது இப்படம். இசை: டி. இமான். "படத்தில் பாலிவுட் வில்லன் ஒருவர் நடிக்க இருக்கிறார். நிஜமான பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்க உள்ளனர்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com