இளம் ராணுவவீரனின் கதை!
நாட்டை காக்கும் இளம் ராணுவவீரர் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது 'இயக்கம்' என்னும் புதிய படம். 'தூத்துக்குடி' மற்றும் 'ஆடுபுலி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய சஞ்சய்ராம் இயக்கத்தில் உருவாகும் 'இயக்கம்' படத்தில் முற்றிலும் புதுமுக நடிக, நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர். இயக்கம் மட்டுமல்லாது கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கிறார் சஞ்சய்ராம்.

'பிலிம் வேல்ட் நிறுவனம்' சார்பில் ஆர்.சித்திரைபூ, ஆர்.புவுசினா ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், நாயகனாக புதுமுகம் தேவானந்த் நடிக்க, வெண்ணிலா நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.எட்வின் படத்திற்கு இசையமைக்கிறார்.

கருணாஸ், வெண்ணிறஆடை மூர்த்தி, பூவிலங்கு மோகன் ஆகியோர் நடிக்க, இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கடலூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைப்பெறவிருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com