ஆகஸ்ட் 25, 2018 அன்று கொலம்பஸ் மாநகரைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி மாணவி சஹானா ராஜேஷின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. ஆடல், பாடல், எழில் எல்லாம் ஒருசேர "நாட்டிய நன்னூல் நன்கு கடைபிடித்து" ஆடினாள் சஹானா.
அமெரிக்காவில் படித்துவரும் தன்போன்ற மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் கணினிவழிக் கல்வி, இந்தியாவில் வாழ்ந்து வரும் எளிய மாணவர்களுக்கும் கிட்டவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர்களுக்கு உதவும்பொருட்டு, தன் அரங்கேற்றத்தின் மூலம் கிட்டதட்ட 10,000 டாலர் நிதி திரட்டினாள். இந்த நிதி தமிழ் நாடு அறக்கட்டளையின் கணினி வகுப்பறைத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திரர் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை நிறுவப் பயன்படுத்தப்படும்.
சஹானா, தனது சீரிய ஆடற்கலையினால் மட்டுமன்றித் தொண்டுள்ளத்தாலும் அங்கு வந்திருந்தோர் நெஞ்சங்களைக் கவர்ந்தாள் என்பதில் ஐயமில்லை.
மணி பெரியகருப்பன், கொலம்பஸ், ஒஹையோ |