TNF-ஹூஸ்டன்: குழந்தைகள் தினவிழா
நவம்பர் 17, 2018 அன்று மாலை 4 மணிக்குப் பியர்லாந்து மீனாட்சி திருக்கோவில் அரங்கத்தில் குழந்தைகள் தினவிழாக் கொண்டாட்டத்தைத் தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை ஏற்பாடு செய்துள்ளது. மேனாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக நவம்பர் 14ம் நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. (அமெரிக்காவில் ஒவ்வொரு ஜூன் மாதம் முதல் ஞாயிறு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.)

தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி மாலா கோபால் அவர்களின் தலைமையிலான குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். விழாவுக்குத் தமிழ் நாட்டிலிருந்து, சினிமா நடிகரும், டிவியில் பலகுரல் நிகழ்ச்சி நடத்துபவருமான 'அது இது எது' கலைஞர் திரு. வடிவேலு பாலாஜி பங்கேற்றுக் குழந்தைகளை மகிழ்விப்பார்.

குழந்தைகள் பங்கேற்கப் பல சிறப்பு நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன:
வயது 4 - 8 - செல்லங்களே என்ற தலைப்பில் தலைவர்கள் போல் ஆடை அலங்கார அணிவகுப்பு.
வயது 9 - 12 - செல்வங்களே என்ற தலைப்பில் - 'மாத்தி யோசி' என்ற விளையாட்டு
வயது 13 - 18 - நாளைய தலைவர்களே என்ற தலைப்பில் 'நான் ஒரு நாள் மந்திரி ஆனால்' பேச்சு.

பார்வையாளர்களும் ஈடுபடும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, தமிழ் நாடு அறக்கட்டளையின் 'இளைஞர் சிறப்பு சந்தர்ப்பம் திட்டம்', 'சேவை மற்றும் கல்வி பயிற்சி', ABC திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவையும் இடம்பெறும்.

மாலா கோபால்,
ஹூஸ்டன்

© TamilOnline.com