புற்றுநோய்க் கழக அறக்கட்டளையும் (Cancer Institute (WIA) Foundation Inc.) வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் (BATM) இணைந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் 'சாரல்' என்ற மெல்லிசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். நடிகை த்ரிஷா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி நவம்பர் 16, 2018 அன்று மாலை 7.30 மணியளவில் Oasis Palace, Newark, CA மற்றும் நவம்பர் 17 அன்று மாலை 5 மணியளவில் Smithwick Theater, Foothill College, Los Altos, CA ஆகிய இடங்களில் நடக்க இருக்கின்றது.
தெற்காசியாவின் முதல் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமான சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, 60 வருடங்களுக்கும் மேலாக, லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றது. தங்களது சிகிச்சை பரவலாகச் சென்று சேரும் விதமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கிளைகளை நிறுவுவதற்கான முயற்சிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதற்கான நிதி திரட்டும் பணிக்காக, அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நமது தொண்டு நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியான 'சாரல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
மேலும் அறியவும், பதிவு செய்யவும்: வலையகம் - cifwia-wp.cifwia.org/saaral-2018 தொலைபேசி: பிரபா - 408-537-3458
ரமேஷ் குப்புசாமி |