புறா பறக்குது


புறா பறக்குது படத்தில் புதுமுகங்கள் ஆருண், கவுதம் ஆகியோர் அறிமுகமாகின்றனர். உடன் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி உள்ளிட்டட பலர் நடிக்கின்றனர். ஜெய் கிரிஷ் இசையமைக்க, லட்சுமிகாந்தன் இயக்குகிறார். "இது ஒரு புதுவிதமான காதல் கதை. இளைஞன் ஒருவன் முதல் காட்சியில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் தனக்கு அவள்தான் என முடிவு செய்கிறான். கடைசிக் காட்சியில் அவளிடம் 'ஐ லவ் யூ' சொல்கிறான். இதற்கிடையே காதலியின் மனதை அவன் எப்படி வெல்கிறான் என்பதை கதை. இந்தப் படத்தில் ஆர்யா, ஷியாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல், வி.ஜே. முரளி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறது. அது ஏன் என்பதுதான் சஸ்பென்ஸ்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com