குருதி ஆட்டம்


அதர்வா நாயகனாக நடிக்கும் படம் குருதி ஆட்டம். அதிரடி ஆக்‌ஷன் + த்ரில்லர் படமாக மதுரையை பின்னணியாகக் கொண்டு படம் உருவாகிறது. நாயகியாக பிரியா பவானிஷங்கர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர்ராஜா இசை. 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இப்படத்தையும் இயக்குகிறார். குருதி ஆட்டம் பற்றி இவர், "த்ரில்லர் பின்னணியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றிப் படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இதில் இருக்கும்" என்கிறார். ஆட்டத்தை ஆரம்பிங்க.

அரவிந்த்

© TamilOnline.com