சூப்பர் டீலக்ஸ்
'ஆரண்ய காண்டம்' வெற்றிப் படத்தைத் தந்த தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதிப் பெருமாள், காயத்ரி என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. கதையைத் தியாகராஜன் குமாரராஜா எழுத, கூடுதல் திரைக்கதையை மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே. சேகர் ஆகியோர் எழுதியுள்ளனர். இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கிறாராம்.



அரவிந்த்

© TamilOnline.com