தெரியுமா?: TNF: 45வது மாநாடு – அட்லாண்டா (மே 25-26, 2019)
தமிழ் நாடு அறக்கட்டளையின் (TNF) 45வது மாநாடு, தரமான கலை நிகழ்ச்சிகளோடு மே 25-26, 2019 தேதிகளில் அட்லாண்டாவில் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவின் 30 மாநிலங்களில் இயங்கி வரும் அறக்கட்டளையின் தலைவர் திரு. சோமலெ சோமசுந்தரம், முதற்கட்டமாக, அக்டோபர் 20, 2018 அன்று அட்லாண்டாவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கூட்டம் நடத்தி மாநாட்டின் முன்னேற்பாடுகளுக்கு அடித்தளம் அமைத்தார்.

அறக்கட்டளையின் செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பது படிப்பில் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் ABC திட்டம். தமிழக அரசின் இசைவோடு இயங்கி வரும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். இந்தச் சேவையைத் தமிழ் நாட்டின் 32 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அமல்படுத்தக் கருதி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் $250,000க்கு மூலதனம் அமைக்கத் திட்டமிட்டு, அதற்காக ‘மண் வாசனை’ என்ற பெயரில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நிதி திரட்டவுள்ளது. இதிலிருந்து வரும் வட்டியை மட்டுமே வைத்து இடைவிடாமல் இந்தச் சேவையைச் செய்யமுடியும். சென்ற ஆண்டு நியூ ஜெர்சியில் நடந்த மாநாட்டில் இதற்கென $195,000 நிதி திரட்டித் தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் Dr. கலை பார்த்திபன் மற்றும் பாலு, தாஸ் குப்புஸ்வாமி, ஜெயா மாறன், மாணவி ஷ்ரேயா ரமேஷ் ஆகியோர் பேசினர். இந்த மாநாட்டில் பங்கேற்று, கல்விக் கண் திறந்து, களிப்படைய வாருங்கள் என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் அறிய:
வலையகம்:
மின்னஞ்சல்:
president@tnfusa.org
தொலைபேசி: 781-486-3872 (781-4TNF-USA)

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com