குமார் ஐஸ்வர்யா அரங்கேற்றம்
குமார் ஐஸ்வர்யாவின் இசை அரங்கேற்றம் தௌசண்ட் ஓக்ஸ், சிவிக் ஆர்ட்ஸ் பிளாசாவில் கடந்த ஜூன் 9ம் தேதி இனிது நடந்தது.

பைரவி ராகவர்ணத்துடன் ஆரம்பித்த கச்சேரி லாகவமாகவும், இனிமையாகவும் கையாளப்பட்டு, சங்கீத மேதை எம்.டி. ராமநாதன் பாணியில் ஆரம்பித்தது. 'மாகேலரா விசாரமு' பாடிய போது இந்த அரங்கேற்றத்தை வெற்றியாக முடிப்பதில் எந்தக் கவலையும் இல்லை என்று சொல்வது போல் (ஸ்ரீ தியாகராஜரும் இராமன் அருளும் இருக்கும் போது எந்தக் கவலையுமில்லை என்றுதானே இந்த பாட்டில் சொல்கிறார்) இருந்தது. ராக ஆலாபனைகள் கச்சிதமாக பாடியதுடன் பல்லவியை அழகாகப் பாடி கற்ற வித்தையை விளங்கும்படி செய்தார்.

பக்கவாத்திய வயலின் வாசித்த இளைஞர் அருண்ராமமூர்த்தியும், மிருதங்கம் வாசித்த இளைஞர் நாமல் நாராயணனும் பெரிய வித்வான்களுக்கு இணையாக வாசித்தனர்.

எல்லாவிதங்களிலும் இந்த நிகழ்ச்சி குருசங்கரிக்கு புகழ்தேடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திரா பார்த்தசாரதி,
அகௌரா, கலி.

© TamilOnline.com