BATM: இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம்
ஆகஸ்ட் 19, 2018 அன்று ஃப்ரீமாண்ட் நகரில் நடைபெற்ற FOG அமைப்பின் இந்திய சுதந்திரதின விழாவில், பாரதி தமிழ்ச்சங்கம் மற்றும் வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றம் பங்கேற்றன.

விழாவில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழகக் கலைகள் இவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் ஊர்தியும் வலம் வந்தது. "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்ற முழக்கம் ஒலிக்க, இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேசியக் கொடிகளை ஏந்தியபடிச் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஊர்தியுடன் நடந்துவந்தனர். தமிழகக் கிராமியக் கலைகளான பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்களைக் குழந்தைகள் ஆடிக்கொண்டும், பெரியவர்கள் பறை இசைக்கு நடனமாடிக் கொண்டும் ஊர்வலத்தில் சென்றனர்.

தமிழ்நாட்டுப் பாரம்பரியம் மிளிர மற்ற மாநிலத்தவருடன் இணைந்து இந்திய சுதந்திரதினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ராம்குமார்,
BATM

© TamilOnline.com