செப்டம்பர் 23, 2018 அன்று மதியம் சான் ஹோசே பாலாஜி கோயில் ஆனந்தா அரங்கத்தில் இந்தியன் க்ளாசிகல் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் வி.வி.எஸ். முராரியின் சாமா ஆர்ட்ஸ் ஆகியவை இணைந்து ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் கர்நாடக இசைக்கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தன. திரு. சாய் ஸ்ரீதர் மிருதங்கத்திலும் திரு. பா. அனந்தகிருஷ்ணன் வயிலினிலும் பக்கம் வாசித்தனர்.
குரு நெய்வேலி சந்தானகோபாலனின் மகளும் மூத்த சிஷ்யையும் ஆவார் ஸ்ரீரஞ்சனி. இவரது இனிய இரண்டரை மணி நேரக் கச்சேரியின் நிறைவில், பாதுகா அகாடமியின் இசை குருக்கள் ஹரி தேவநாத் மற்றும் விவேக் சுந்தர்ராமன் ஸ்ரீரஞ்சனியின் நிரவல்களின் நேர்த்தி மற்றும் இசை நுணுக்கங்களை வெகுவாகப் பாராட்டினார்கள். ஸ்ரீரஞ்சனியின் முருகன் பாடல்கள் ரசிகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
அகாடமியின் வெங்கடேஷ் பாபுவின் அழைப்பில் கர்நாடிக் சேம்பர் கான்சர்டின் (CCC) திருமதி. பத்மா மோகன் ஸ்ரீரஞ்சனினுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள். விவேக் சுந்தர்ராமன் மற்றும் ஹரி தேவநாத் முறையே திரு. பா. அனந்தக் கிருஷ்ணன் மற்றும் திரு. சாய் கிரிதருக்குப் பொன்னாடை போர்த்தினர்.
வெங்கடேஷ் பாபு, சான் ஹோசே, கலிஃபோர்னியா |