காவியன்


நீண்ட இடைவெளிக்குப் பின் ஷாம் நாயகனாக நடித்துள்ள படம் காவியன். ஆத்மியா கதாநாயகி. ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்கள் ஏற்றுள்ளனர். ஜெஸ்டின் விகாஸ் வில்லனாக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் பலரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடந்திருக்கிறது. ஆக்‌ஷன் தில்லரான இப்படத்திற்கு இசை ஷ்யாம் மோகன். இயக்கம், சாரதி. "ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது. சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்க வைக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது" என்கிறார் இயக்குனர். தெலுங்கிலும் இந்தப் படம் `வாடு ஒஸ்தாடு' என்ற பெயரில் வெளியாக உள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com