கணிதப் புதிர்கள்
1. கீழ்க்கண்ட வரிசையில் விடுபட்ட எண் எது?

8, 7, 16, 15, 32, 31, 64, ..., ...,

2. ஒரு பெட்டியில் மொத்தம் 1521 டாலர் பணம் இருந்தது. அது அங்கிருந்த மாணவர்களுக்குப் பகிர்ந்து தரப்பட்டது. மாணவர் எண்ணிக்கையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையும் ஒன்று. அப்படியென்றால் மாணவர்கள் எத்தனை, ஒவ்வொரும் பெற்ற தொகை எவ்வளவு?

3. மூன்று எண்களின் சராசரி 1000. முதல் எண்ணைப் போல் மூன்று மடங்கு இரண்டாவது எண். இரண்டாவது எண்ணைப்போல் இருமடங்கு மூன்றாவது எண் என்றால், அந்த எண்கள் என்ன?

4. சோமுவிற்கு மூன்று பிள்ளைகள். மூவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு. மூவரின் வயதையும் கூட்டினால் 36 வருகிறது என்றால், ஒவ்வொருவரின் வயது என்ன?

5. ஒரு பண்ணையில் சில குதிரைகளும் சில புறாக்களுமாகச் சேர்ந்து மொத்தம் 60 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 172 என்றால் குதிரைகள் எத்தனை, புறாக்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com