குளோரியா பாரன் அமைப்பால் கௌரவத்துக்குரியவராகக் கொலராடோவைச் சேர்ந்த செல்வி கீதாஞ்சலி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 12 வயதான கீதாஞ்சலி குடிநீரில் காரீயம் (Lead) இருக்கிறதா என்று கண்டறிய அதிகச் செலவில்லாத, எளிதில் பயன்படுத்தக் கூடிய கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். காரீயம் ரத்தத்தில் கலப்பதால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும். 2014ல் ஃப்ளின்ட், மிச்சிகனில் குடிநீர், காரீயத்தால் அதிக நஞ்சாகியிருப்பதைக் கவனித்தார் கீதாஞ்சலி. அதற்கொரு தீர்வு காணத் தீர்மானித்தார் கீதாஞ்சலி. காற்றிலிருக்கும் மாசுகளைக் களைய நேனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்றால் அது நீருக்கும் பயன்படும் என்பதை அவரது தேடல் உறுதிப்படுத்தியது.
மிகுந்த உழைப்புக்குப் பின் அதற்கான ஒரு கருவியை வடிவமைத்த கீதாஞ்சலிக்கு Discovery 3M Young Scientist of the Year மற்றும் grand prize winner of the worldwide Paradigm Challenge விருது 2017ல் கிடைத்தது. தற்போது அவர் Denver Water அமைப்பின் உதவியுடன் பெரிய அளவில் தனது கருவியின் செயல்பாட்டைப் பரிசோதித்து வருகிறார்.
"எவருக்கெல்லாம் தேவைப்படுமோ அவருக்கெல்லாம் கிடைக்கும் வண்ணம் எனது கண்டுபிடிப்பை எடுத்துச் செல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்கிறார் கீதாஞ்சலி. "உலக அளவில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்" என்றும் சொல்கிறார்.
ஷ்ரேயாவும் கீதாஞ்சலியும் இந்த உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பதில் சந்தேகமில்லை.
தொகுப்பு: மதுரபாரதி |