அதையும் தாண்டிப் புனிதமானது


கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவுபற்றிப் பேசுகிறது 'அதையும் தாண்டிப் புனிதமானது'. புதுமுகங்கள் ஜெய், கெளதம் நாயகர்களாகவும், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா நாயகிகளாகவும் நடிக்கின்றனர். ஆண், பெண் உறவுகள் தவறாகப் போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதுதான் படத்தின் கதை. வைரபாரதி, வெங்கடசுப்பு, நாக முருகேசன் ஆகியோர் பாடல்களை எழுத, வி.கே.கண்ணன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர். வெங்கட்ரமணன். இவர் ஏற்கனவே, குடியின் கொடுமையை விளக்கும் 'அப்பா ..வேணாம்ப்பா..' என்ற சமூக அக்கறையுள்ள படத்தைத் தந்தவர்.

அரவிந்த்

© TamilOnline.com