ஜிப்ஸி


ஜீவா படத்தின் நாயகன். நடாஷா சிங் கதாநாயகி. முக்கிய வேடங்களில் முன்னணி நடிக, நடிகையர் நடிக்கின்றனர். குக்கூ, ஜோக்கர் போன்ற வெற்றிப்படங்களைத் தந்த ராஜு முருகன் இயக்குகிறார். பாடல்களை யுகபாரதி எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம்பற்றி இயக்குநர், "என்னுடைய முந்தைய படங்களிலிருந்து இந்தப் படம் மாறுபட்ட படமாக இருக்கும். என் பாணியிலிருந்து மாறுபட்டு கமர்ஷியல் கருத்துப் படமாக உருவாக்கியுள்ளேன்." என்கிறார். கமர்ஷியலில் ஏது கருத்து என்று கேட்கிறார் கோவிந்து!

அரவிந்த்

© TamilOnline.com