பாண்டிமுனி


நாயகனாக ஆசிப்பும், நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா உள்ளிட்டோரும் அறிமுகமாகும் படம் பாண்டிமுனி. பிரபல ஹிந்திப்பட நடிகர் ஜாக்கி ஷெராஃப் அகோரி வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சாயாஜி ஷிண்டே நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. "இது ஒரு படுபயங்கரமான படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்துப் படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடந்தபோது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. பனகுடிசோலை என்ற இடத்தில் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. கோயில் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அங்கே பஞ்சபாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெலவெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிப் பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அதைவிட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை" என்கிறார் முனீஸ்வரா!

அரவிந்த்

© TamilOnline.com