இரண்டு வருட தேடலுக்குப் பிறகு கடைசியில் தன் தேவதையைக் கண்டுகொண்டார் நடிகர் பிரசாந்த். ஆம் பிரசாந்திற்கு திருமணம்!
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தனசேகரின் மகள் கிரகலட்சுமியை கைப்பிடிக்கப்போகிறார் பிரசாந்த். கடந்த வாரம் சென்னை தாஜ்கோரமண்டல் ஓட்டலில் குடும்ப அங்கத்தினர்கள் முன்னிலையில் இதற்கான நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
எம்.ஏ. பட்டதாரியான கிரகலட்சுமியைக் கரம் பிடிக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் பிரசாந்த். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடை பெறவிருக்கும் இவரின் திருமணத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமாக் கலைஞர்கள் வரை அழைக்கவிருக்கிறார்கள்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |