2018 நவம்பர் 3-4 தேதிகளில் சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் San Mateo Event Center அரங்கத்தில் (சான் மேட்டியோ, கலிஃபோர்னியா) அகப் பொறியியல் (Inner Engineering) கற்பிப்பார். உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரைத் தமது யோகம் மற்றும் தியானப் பயிற்சிகள் மூலம் இவர் தொட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
ஈஷா யோகம் என அறியப்படும் இவரது யோகமுறைக்கென டென்னஸியின் மக்மின்வில் நகரில் ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்னர் சயன்சஸ் என்பதை நிறுவி அதன்மூலம் மானுடரின் பிரக்ஞையை மேம்படுத்துதல், உலக ஒருமைப்பாடு ஆகியவற்றைத் தனிமனித உயர்மாற்றத்தின் மூலம் கொண்டுவர உழைத்து வருகிறார். உலகெங்கிலும் 7 மில்லியன் பேர் ஈஷா யோக முறைகளை அன்றாடம் பயிற்சி செய்வதாக ஈஷா அறக்கட்டளை தெரிவிக்கிறது.
அகப் பொறியியல் பயிற்சியில் சத்குரு அவர்கள் ஞானம் மற்றும் உள்ளறிவோடு கூடிய 21 நிமிடப் பயிற்சி முறையைப் போதிப்பார். இதனைப் பின்பற்ற முன்னரே நெடுங்காலம் யோகப்பயிற்சி செய்திருக்க வேண்டியதில்லை. பிராணனின் மீது மனதைக் குவிப்பதன் மூலமாக ஆனந்தமும், சஞ்சலமற்ற நிலையும் அடைய இப்பயிற்சி முறை வழிகாட்டுகிறது. 30 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வரும் அகப் பொறியியல் வழிமுறையைக் கடைப்பிடிப்போரில் 90 சதவிகிதத்தினர் மேம்பட்ட அமைதியை மனதில் உணர்வதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
மேலும் அறியவும் முன்பதிவு செய்யவும்: innerengineering.com
செய்திக்குறிப்பிலிருந்து |