தெரியுமா?: இறகுப்பந்து சேம்பியன்ஷிப்கள்
தடம் பதிக்கும் அமெரிக்க-இந்தியக் குழந்தைகள்: 2018ம் ஆண்டுக்கான பான் அமெரிக்கன் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்கள் பிரேசில் நாட்டின் சால்வடார் பஹியா நகரில் ஜூலை 23 முதல் 26 வரை நடந்தன. இதில் வட அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு அமெரிக்காவின் சார்பாகப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதிபெற்ற இந்தியக் குழந்தைகளின் விவரம்:
நேத்ரா ஷெட்டி (U15 - விரிகுடாப் பகுதி, கலிஃபோர்னியா)
ஷ்ரியா சொக்கலிங்கம் (U15 - விரிகுடாப் பகுதி, கலிஃபோர்னியா)
சித்தார்த்த ஜவ்வாஜி (U15 - விரிகுடாப் பகுதி, கலிஃபோர்னியா)
பவ்யா மணிகொண்டா (U17 - கீழைக் கடற்கரை)
ரோஷ்னி வெங்கட் (U17 - பெங்களூரு, இந்தியா)
ஷிபானி ராம் (U17 - சிகாகோ, இல்லினாய்)
கார்த்திக் கல்யாணசுந்தரம் (U19 - விரிகுடாப் பகுதி, கலிஃபோர்னியா)
ரயன் நிபு (U19 - டாலஸ், டெக்சஸ்)
சஞ்சிதா பாண்டே (U19 - கீழைக் கடற்கரை)

சிறப்பாக ஆடியவர்கள்
19 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறுவர் (ஒற்றையர்) இறுதிச் சுற்றில் விளையாடிய கார்த்திக் கல்யாணசுந்தரம் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றி வெள்ளிப் பதக்கம் வென்றார்
19 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறுமியர் (இரட்டையர்) ஆட்டத்தில் பங்கேற்ற சஞ்சிதா பாண்டே வெள்ளிப் பதக்கம் வென்றார்.
15 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறுமியர் (இரட்டையர்) ஆட்டத்தில் நேத்ரா ஷெட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
15 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறுமியர் (ஒற்றையர்) ஆட்டத்தில் ஷ்ரியா சொக்கலிங்கம் வெண்கலப் பதக்கம் வென்றார்.
15 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறுவர் (ஒற்றையர்) ஆட்டத்தில் சித்தார்த்த ஜவ்வாஜி வெண்கலம் வென்றார்.
17 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான சிறுமியர் (இரட்டையர்) ஆட்டத்தில் ஷிபானி ராம் வெண்கலம் வென்றார்.

போட்டித்தொடர் குறித்த முழுமையான விவரங்களுக்கு:
www.tournamentsoftware.com அல்லது bit.ly/2v1qG9h

போட்டிகளின் விடியோக்களைக் காண:
youtube.com

இறகுப்பந்து ஆட்டக் குழுவில் சேர:
www.teamusa.org/USA-Badminton

© TamilOnline.com